மதுரை ஸ்பெஷல் ‘உருளைக்கிழங்கு மசியல்’ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க!

Summary: மதுரை ஸ்பெஷல் உருளைக்கிழங்கு மசியல் இப்படி செய்து பாருங்க. இது செய்வது மிகவும் ஈஸி. மேலும் இது வீட்டில்உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது மதுரை உருளைக்கிழங்குமசியலின் எளிய செய்முறையைப் பார்ப்போமா!உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தேசில நிமிடத்தில் ஆரோக்கியமான இந்த உருளைக்கிழங்கு மசியல் எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேர் ஆரோக்கியம் தரும் இந்த மசியல் சமையலில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இப்படி சமைத்துக் கொடுங்கள். கட்டாயம்எல்லோருக்கும் பிடிக்கும்.

Ingredients:

  • 3 உருளைக்கிழங்கு
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் சோம்பு
  • 2 வரமிளகாய்
  • கறிவேப்பிலை
  • 6 பற்கள் பூண்டு
  • 1 வெங்காயம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதில் பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
  3. பின்பு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
  4. பிறகு கடலை மாவு சேர்த்து 5-8 நிமிடம் நன்கு பிரட்டி, கொத்தமல்லி இறக்கினால், மதுரை உருளைக்கிழங்கு மசியல் ரெடி!!