பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? சட்டென முட்டை பிரியாணி இப்படி செய்து கொடுங்கள்!

Summary: பொதுவாக பிரியாணி என்றாலே அதற்கு தனி மவுசு தான். அனைவருக்கும் தெரிந்தது போலவே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி தான் பிரியாணிகளில் பெரும்பாலானோரால் விரும்பி உண்ண படுகிறது. தமிழ்நாட்டிலும் பலவிதமான பிரியாணிகள் கிடைக்கும் உதாரணமாக செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி மற்றும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகியவை மிக மிக புகழ்பெற்றது. ஒவ்வொரு பிரியாணியும் ஒவ்வொரு வகையில்  வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.

Ingredients:

  • 4 முட்டை
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 1/4 கரம் மசாலா தூள்
  • உப்பு
  • 2 கப் பாசுமதி அரிசி
  • 2 மேசைக்கரண்டி நெய்
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 4 லவங்கம்
  • 2 பிரியாணி இலை
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 கப் புதினா, மல்லி
  • உப்பு
  • முந்திரி

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக வெட்டி பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் முந்திரி, கிஸ்மிஸையும் நெய்யில் பொரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. வேகவைத்த முட்டையை லேசாக நான்கு புறமும் கீறி வாணலியில் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மிதமான தீயில் கலந்துவிட்டு அதில் முட்டையை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்
  3. குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய் சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  4. வெங்காயம்பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.
  5. பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஊற வைத்த அரிசியை வடிகட்டி இந்தக் கலவையோடு சேர்த்து கிளறி விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொரித்தெடுத்த முட்டைகளை இந்த அரிசி கலவை மேல் அடுக்கி குக்கரை மூடி விடவும்.
  6. மிதமான தீயில் வைத்து 3 விசில் வரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் குக்கர் மூடியைத் திறந்த பொரித்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் முந்திரி பருப்பினை மேலாகத் தூவி கிளறிவிடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான முட்டை பிரியாணி தயார்.