குக் வித் கோமாளி நிகழ்சியில் சிவாங்கி செய்யத ஒரியோ ப்ரௌணி இப்படி செஞ்சி பாருங்க!

Summary: பண்டிகைகள் என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். சில உணவு வகைகள் எவ்வளவு உண்டாலும் திரும்பத் திரும்ப உண்ணத் தோன்றும், பிரவுனிகள் அந்த வகையை சார்ந்தவை. இந்த ஓரியோ பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

Ingredients:

  • 4 ஓரியோ பிஸ்கட்
  • 1 முட்டை
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 25 கிராம் வெண்ணெய்
  • 50 கிராம் டார்க் சாக்லெட்
  • 1/2 கப் மைதா
  • 1/4 கப் கோகோ பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/4 டீஸ்பூன் உப்பு

Equipemnts:

  • 2 பவுள்
  • 1 ஓவன்
  • 1 மிக்ஸி
  • 1 பீட்டர்

Steps:

  1. முதலில் ஓரியோ பிஸ்கட்டை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பவுளில் முட்டை எடுத்து‌ அதனை நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் ‌சர்க்கரை மற்றும் பால் சேர்த்து பீட்டரால் சர்க்கரை கறையும் வரை நன்கு பீட்‌ செய்யவும்.
  3. பின் வெண்ணெய் மற்றும் சாக்லேட்டை ஓவனில் வைத்து நன்கு உருக்கி கொள்ளவும். இதனை முட்டையுடன் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  4. அதன்பிறகு கோகோ பவுடர், மைதா இரண்டையும்‌ சலித்து முட்டையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  5. இதில் பேக்கிங் பவுடர், நாம் அரைத்து வைத்துள்ள பிஸ்கட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  6. பின் ஒரு பவுளில் பட்டர் பேப்பர் விரித்து அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள சாக்லேட் கலவையை ஊற்றி ஓவனில் 200° செல்சியஸில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  7. அவ்வளவுதான் சுவையான ஓரியோ ப்ரௌனி தயார்.