ஆரோக்கியத்தை அள்ளிக் தரும் தேங்காய் பூ மில்க் ஷேக் போட்டுக் கொடுத்தா குழந்தைகள் சமத்தா குடிச்சிடுவாங்க!

Summary: உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது. தேங்காய் பூவில் அதிக அளவில் புரதம் உள்ளது. இது உடலுக்கு வலிமை கிடைக்கவும், எளிதில் ஜீரணமாகவும், மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். மில்க் ஷேக் பலவிதமான சுவைகளில் கிடைக்கிறது. மில்க் ஷேக் குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைக்கோ, உணவு விடுதிக்கோ, பேக்கரிகளுக்கோ சென்றால் தான் குடிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. சரி, இப்போது தேங்காய் பூ மில்க் ஷேக்கைஎப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம்.

Ingredients:

  • 2 தேங்காய் பூ
  • 1 கப் பால்
  • 6 ஐஸ் கட்டிகள்
  • சர்க்கரை
  • 6 பேரிச்சம்பழம்
  • பாதாம்
  • முந்திரி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் தேங்காய் பூவை நான்கு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின்னர் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும்.ஆறிய பால், தேவையான அளவு சர்க்கரை மற்றும் பேரிச்சம்பழத்தை தேங்காய் பூவுடன் சேர்த்து மறுமுறை அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்பு இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளவும்.
  4. அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
  5. அவ்வளவுதான் சுவையான தேங்காய் பூ மில்க் ஷேக்தயார்.