இட்லி மாவு இருந்தால் போதும் மொறு மொறுனு போண்டா இப்படி செய்து அசத்துங்கள்!

Summary: கார போண்டா பொதுவாக அரிசி மாவு, மைதா மாவு போன்றவற்றில் செய்வது உண்டு ஆனால் இட்லி மாவில் இதுபோல ரொம்ப சுலபமாக மாலை நேரத்தில் செஞ்சு பாருங்க, டீயுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.இட்லி மாவில்… காரசாரமான ருசியில். மொறுமொறுப்பான ரெசிபி செய்து அசத்துங்க..!!இந்தசுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது? என்று இனி தொடர்ந்து இந்த பதிவைபடித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Ingredients:

  • 2 கப் இட்லி மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி இலை,சீரகம்,ருசிக்கேற்ப உப்பு போட்டு,கூடுதலாக தண்ணீர் சேர்க்காமல் நன்கு கெட்டியாகவும், போண்டா மாவு பதத்திற்கும் நன்கு கரண்டியால் கலந்து கொள்ளவும்.
  3. பின்பு அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிக்க தேவைகேற்ப எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் எண்ணெய் நன்கு கொதித்ததும், அதில் கலந்து வைத்த இட்லி மாவு கலவையை சிறிய உருண்டைகளாக எடுத்து,கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு நன்கு வேக வைக்கவும்.
  4. போண்டாவானது நன்கு வெந்ததும், நீளமான கம்பியால் திருப்பி விட்டு, இரு புறமும் சிவக்கும் அளவுக்கு, வேக வைத்து பொரித்து எடுத்து சூடாக பரிமாறினால், மொறுமொறுப்பான இட்லி மாவு போண்டா ரெடி.