ஆரோக்கியமான சுவையான கேரட் மில்க் ஷேக் சும்மா குளுகுளுன்னு செய்து குடிச்சு பாருங்களேன்!!!

Summary: மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக கேரட்டைக் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். இதை வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக செய்யலாம். அதே சமயம் ருசியையும் சுவையையும் அனைவரும் விரும்புவார்கள்.  கேரட்மில்க் ஷேக் கேரட், பால், பாதாம் மற்றும் தேனைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான கேரட் மில்க் ஷேக்கை உண்டு மகிழுங்கள்.

Ingredients:

  • 3 கேரட்
  • 2 கப் பால்
  • 1 ஏலக்காய்
  • 6 ஸ்பூன் சர்க்கரை
  • 3 பேரிச்சம்பழம்
  • 4 பாதாம்
  • 4 முந்திரி
  • ஜஸ் கட்டிகள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • `1 பவுள்

Steps:

  1. முதலில் கேரட்டை நன்கு கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி அதனுடன் ஏலக்காய் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
  3. பின் மிக்ஸியில் நறுக்கிய கேரட், சர்க்கரை, பேரிச்சம்பழம், பாதம், முந்திரி, காய்ச்சி ஆறவைத்த பால், சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி ஐஸ் கட்டிகள் போட்டு அதன் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து கொள்ளவும்.
  5. அவ்வளவுதான் சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.