பார்த்தாலே நாவில் எச்சி ஊறும் ருசியான கத்தரிக்காய் தவா வறுவல் இப்படி செய்து பாருங்க!

Summary: காய்கறிகள் அனைத்துமே சத்து நிறைந்தவை . ஆனால் நம்மில் சிலருக்கு சில காய்கறிகள் பிடிக்காது. உணவின் போது ஒதுக்கி வைத்து விடுவோம் . கத்திரிக்காயில் பலவிதமாக சுவைத்திருப்போம். கத்தரிக்காய் சாம்பார் ,புளி குழம்பு, கத்தரிக்காய் வறுவல் ,எண்ணெய் கத்திரிக்காய் , கத்திரிக்காய் தொக்கு இப்படி பல வகைகள் உண்டு.இப்பொழுது நாம் பார்க்க இருப்பது சுவையான கம கம என்றுமணக்க கூடிய கத்திரிக்காய் தவா வறுவல் இது வட இந்தியாவில்அதிகம் செய்து உண்ணும்ஒரு உணவாகும். இதில் பெரிய நீல நிற கத்திரிக்காயை உபயோகிப்போம். இந்தக் கத்திரிக்காய் தவா ஃப்ரைக்கு முக்கியமான விஷயம் நம்ம செய்யப் போகும் மசாலா பொடி . அந்த மசாலா பொடியை சரியா செய்தால் மட்டும் தான் இந்த கத்திரிக்காய் நல்ல சுவையாக வரும். மசாலா எப்படி ரெடி பண்றது எப்படி தவாவில் வச்சு பிரை பண்றது எல்லாம் பார்க்கலாம். இந்த தவாஃ ப்ரை செஞ்சு அசத்த போறோம்.சரி எப்படி கத்திரிக்காய் தவா ப்ரை செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.

Ingredients:

  • 2 பெரிய கத்திரிக்காய்
  • எண்ணெய்
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு வறுத்தது
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 2 டீஸ்பூன் அம்சூர் பவுடர்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலாத் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • உப்பு

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. முழு கத்திரிக்காய் எடுத்து சுத்தமாக கழுவி பின் நான் வட்ட அளவான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்னர் கடலை மாவு , மஞ்சள் தூள், கஷ்மீரின் மிளகாய் தூள் , மல்லித்தூள் ,சீரகத்தூள், கரமசாலா தூள், பெருங்காயத்தூள், ஆம்சூர் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக இந்த தூள்களை கலந்து விட வேண்டும் .
  3. பிறகு வெட்டி வைத்த கத்திரிக்காய் துண்டுகளை எடுத்து கத்திரிக்காயின் இரண்டு பக்கமும் நன்றாக மசாலாபொடி  படருமாறுதடவ வேண்டும் .
  4. அனைத்து கத்திரிக்காய் துண்டுகளையும் இவ்வாறு தடவி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  அப்பொழுது தான் மசாலா பொடி கத்திரிக்காய்க்குள் இறங்கும்.
  5. பிறகு அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கத்திரிக்காய் துண்டுகளை அதில் வறுப்பதற்கு அடுக்க வேண்டும்.
  6. ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கத்தை திருப்பி போடுவதற்கு முன்பு மேல் பக்கத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி பிறகு திருப்பி போட வேண்டும். அப்போது தான் மசாலா  தவாவில் ஒட்டாமல் நன்றாக கத்தரிக்காயுடன் ஒட்டி வரும்.
  7. அதை ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும் இவ்வாறு இரண்டு பக்கமும் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்தால் மொறு மொறுப்பான கமகம கத்திரிக்காய் தவா  வறுவல்தயார்.