கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய்வது எப்படி ?

Summary: பிற மாநிலங்களில் அவர்கள் ஸ்டைலில் செய்யப்படும் கூட்டு, பொரியல் மற்றும் அவியல் அட்டகாசமான சுவையில் இருக்கும். ஆகையால் இன்று நம் அண்டை மாநிலம் கேரளாவில் செய்யப்படும் அவியல் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக அவியல் வாரத்தில் ஒருமுறை நம் உணவுடன் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது ஏனென்றால் அதில் நாம் அதிகப்படியான காய்கறிகள் சேர்த்து செய்வதால் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதில் நிறைய இருக்கும். ஆனால் பலரது வீடுகளில் தற்சமயம் அவியல் செய்வதை குறைந்து வருகிறது. ஆனால் இந்த கேரளா ஸ்டைலில் அவியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Ingredients:

  • 1 முழு காய் துருவிய தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 வாழைக்காய்
  • 2 கேரட்
  • 1 துண்டு சேனைக்கிழங்கு
  • 1 துண்டு வெண் பூசணிக்காய்
  • 4 கோத்தவரங்காய்
  • 3 அவரைக்காய்
  • 2 கத்தரிக்காய்
  • 4 பீன்ஸ்
  • 1 முருங்கைகாய்
  • உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 3 tbsp தேங்காய் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் நாம் எடுத்துக் கொண்ட காய்கறிகளை தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி தோல் சீவ வேண்டியுள்ள காய்கறிகளை தோலை சீவி கொண்டு மீடியம் சைஸ் ஆன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் நறுக்கிய காய்கறிகளில் வெண்பூசணிக்காயை தவிர அனைத்தையும் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் அளவு உப்பு மற்றும் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து வேக விடுங்கள்.
  3. அதன் பின் காய்கறிகள் பாதி அளவு வந்து வந்தவுடன் நான் தனியாக வைத்திருக்கும் வெண் பூசணிக்காயை சேர்த்து மீண்டும் கடாயை மூடி நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  4. இந்த நேரத்தில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு முழு தேங்காயை உடைத்து துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகம், நான்கு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  5. அதன் பின்பு காய்கறிகள் நன்றாக வெந்து வந்ததும் நாம் அரைத்த தேங்காயை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். அதன் பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கடாயை மூடி ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  6. ஐந்து நிமிடம் கழித்து அவியல் மீது இரண்டு கொத்து கருவாப்பிலை மற்றும் மூன்று டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஊற்றி அடுப்பை அணைத்து. சிறிது நேரம் கடாயை மூடி விடுங்கள் அவ்வளவு தான் சுவையான கேரளா ஸ்டைல் காய்கறி அவியல் தயாராகிவிட்டது.