கொத்துமல்லி  தக்காளி தொக்கை ரொம்ப வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்!

Summary: இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான்சட்னி சாம்பார் போன்றவை செய்தாலும் இந்த கொத்துமல்லி – தக்காளி சட்னி ஒரு தனி சுவையைகொடுக்கும். இரண்டு இட்லி சாப்பிடுவர்கள் கூட கொத்துமல்லி – தக்காளி தொக்கு இருந்தால்கூட ஒன்று சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் காம்பினேஷன் நன்றாகவே இருக்கும். இப்போதுஇந்த சமையல் குறிப்பு பதிவில் அதை கொத்துமல்லி – தக்காளி தொக்கை கொஞ்சம் வித்தியாசமானசுவையில் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 5 தக்காளி
  • 1/2 கட்டு மல்லித்தழை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளி
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 6 பூண்டு
  • பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/4 கப் எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பூண்டை நசுக்கி கொள்ளுங்கள்.
  2. எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்து பூண்டை சேர்த்து, நன்கு சிவந்து பொன்னிறமாக பொரிந்ததும்,தக்காளியைச் சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள் சேருங்கள்.
  3. அரை கப் கொதிநீரில் புளியைக் கரைத்து வடி கட்டுங்கள்.
  4. இதனுடன் தக்காளி சேர்த்து கொதித்து, சேர்ந்து வரும்போது கறிவேப்பிலை, பொடி யாக நறுக்கிய மல்லித்தழையைப்போட்டு, வெந்தயத்தூள், பெருங் காயத்தூளை சேர்த்து சுருண்டு வரும்வரை கிளறி இறக்குங்கள்.