சுவையான தால் பாத்,  ஒருமுறை இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள் எவ்வளவு நிறைய செய்தாலும் சட்டென காலியாகிவிடும்

Summary: பருப்பு சாத உணவு வகைகளில் இந்த பிரபலமான பிஸிபேளாபாத்தும்  ஒன்றாகும். பிஸிபேளாபாத்தும் ,பாரம்பரியம் மிக்கஅரிசி பருப்பு உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பதுஇதன் சிறப்பம்சமாகும். அதே வகையில் இந்த தால் பாத் சற்று வித்யாசமா முறையில் எப்படிசெய்வது என்று பார்ப்போம். அலுவலகம் செல்வோர் முதல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்துஅனுப்புவது முதல் சுலபமாக டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு போகக் கூடிய இந்த தால் பாத்எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.

Ingredients:

  • 1 கப் பச்சரிசி
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 பூண்டு
  • 1 தேக்கரண்டி சீரகப் பொடி
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி நெய்
  • உப்பு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பூண்டைத் தோல் உரித்துக்கொள்ளுங்கள்.
  2. அரிசி,பருப்புடன் பூண்டு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு, 5 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் வேக வைக்கவும்.
  3. குக்கரில் வைத்து மூடி, விசில் 2 அல்லது 3 வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.
  4. பிறகு,வேறு வாணலியில் நெய், கறிவேப்பிலை சேர்த்துக் தாளித்து சாதத்தில் சேர்க்கவும்.
  5. இந்த'பாத்'துக்கு அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு பொரியல் நல்ல சைடிஷ்.