கிராமத்து சுவையில் மொச்சை பருப்பு கறி ரொம்ப ரொம்ப சுவையாக இப்படி செய்து பாருங்களேன்!

Summary: குழந்தைகள் வெறும் பயிரை சாப்பிட விரும்பவில்லை என்றால் அவர்களுக்கு கொஞ்சம் மசாலா சுவையில் மொச்சைகறி செய்து கொடுக்கலாம். அப்படி மொச்சைப் பயறை வைத்து ஒரு சுவையான மொச்சை கறி மொச்சைபயிறு வைத்து ஒரு கறி ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுடசாதத்தில் இந்தக் கறி போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ளஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்த மொச்சை எதில் வேண்டுமென்றாலும்இந்த ரெசிபியை நீங்க செய்து பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 வெங்காயம்
  • 10 சிறிய வெங்காயம்
  • 1 கப் மொச்சை
  • 6 சிகப்பு மிளகாய்
  • 3/4 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
  • 3/4 தேக்கரண்டி சீரகம்
  • 8 மிளகு
  • 1/2 கப் துருவிய தேங்காய்
  • 1/2 தேக்கரண்டி கசகசா
  • 2 1/2 கறிவேப்பிலை
  • புளி
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. எண்ணெய் இல்லாமல் சிகப்பு மிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகு, தேங்காய் (1/4 கப்), கறிவேப்பிலை ஆகியவற்றை வறுத்தெடுக்க வேண்டும்.
  2. வெங்காயத்தை நேரிடையாக தணலில் சுட்டு தோலுரித்து வறுத்து வைத்திருக்கும் மற்றவையோடு சேர்த்து அரைக்க வேண்டும்.
  3. மொச்சையை வேக வைத்து தோலுரித்து வைக்க வேண்டும். கசகசாவை சுடு தண்ணீரில் ஊறவைத்து மீதமுள்ள தேங்காயுடன் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
  4. எண்ணெய் சூடானதும் சிறிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மொச்சையை சேர்க்கவும்.
  5. பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து புளி தண்ணீர் சேர்த்து (தேவையானால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) மூடி போட்டு கொதிக்க விட வேண்டும்.
  6. புளியின் பச்சை வாசனை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள கசகசா மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.