தித்திக்கும் சுவையில் ருசியான பேரிச்சை லட்டு இப்படி செஞ்சி பாருங்க! ஒரு லட்டு கூட மிஞ்சாது!

Summary: பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை குழந்தையின்மை , ரத்த சோகை இந்த குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது நீர்க்கட்டி.  இந்த நீர்க்கட்டி பிரச்சினை முழுவதுமாக சரியாவதற்கு இந்த லட்டை தினமும் உண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது நீர்க்கட்டி பிரச்சினை, ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்வது மட்டுமல்லாது உடலுக்கு வலிமையையும் கொடுக்கிறது. ஆகையால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். இதில் உலர்ந்த அத்திப்பழம், பேரிச்சை , முந்திரி,  பாதாம்,  தர்பூசணி விதை , கசகசா எல்லாம் இருப்பதால் உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டால் உடலில் உள்ள நோய்கள் பாதி குறைந்துவிடும் . அது மட்டுமல்லாமல் உடலுக்கு வலிமை , சுறுசுறுப்பையும் அளிக்கும்.

Ingredients:

  • 1 கப் உலர்ந்த அத்தி பழம்
  • 1 கப் பேரிச்சை பழம்
  • 1/4 கப் முந்திரி
  • 1/4 கப் பாதாம்
  • 1/4 கப் தர்பூசணி விதை
  • 1/4 கப் தேங்காய் துருவல் வறுத்தது
  • 2 டேபிள் ஸ்பூன் கசகசா
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1/2 ஸ்பூன் ஏலக்காய் பவுடர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்

Steps:

  1. ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தை சூடான நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  2. பிறகு நீரை வடித்து விட்டு மிக்ஸியில் அத்திபழம் பேரிச்சம்பழம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  3. பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் பாதாம் , முந்திரி ,  தர்பூசணி விதை, கசகசா வறுத்த தேங்காய் துருவல் இவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும் .
  4. அதில் அரைத்த பேரிச்சை மற்றும் அத்தி கலவையை கலந்து நன்றாக கிளறி விட வேண்டும்.
  5. அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்றாக நெய் விட்டு கிளறி அதில் ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொண்டு கை பொறுக்கும் அளவிற்குசூடு வந்தவுடன் சிறிது சிறிது லட்டு உருண்டைகளாக உருட்ட வேண்டும்.
  6. சுவையான அத்தி பேரிச்சலட்டு தயார். இந்த அத்தி பேரிச்சை லட்டை தினமும் ஒரு லட்டு என்று உண்டு வர வேண்டும்.
  7. இப்பொழுது நாம் செய்த அளவை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை உண்ணலாம்.