Summary: மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது மீன் உண்பது மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது. அதனால் மீனை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது . கண் பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை இவ்வாறு உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். கடல் சார்ந்த உணவுகளில் மீனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மீனில்இருக்கும் கால்சியம் விட்டமின்கள் உடலுக்கு அதிக வலுவை தருவதால் குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணத்தக்க ஒரு உணவாக உலக அளவில் இருக்கிறது.