மதிய உணவுக்கு ஏற்ற சுவையான முள்ளங்கி பொரியல் கூட்டு செய்வது எப்படி ?

Summary: குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் என் ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம் இல்லையென்றால் அரைகுறையாக சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவோம். அதுவும் குழந்தைகள் என்றால் சுத்தமாக கூட்டு இல்லாமல் சாப்பிட மாட்டார்கள் நீங்களும் அடுத்த நாளைக்கு என்ன கூட்டு செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த முள்ளங்கி பொரியல் கூட்டு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும் நீங்கள் வைத்த ஒரு தட்டு சோறும் காலி ஆகிவிடும்.

Ingredients:

  • ½ கப் தேங்காய் துண்டுகள்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய முள்ளங்கி
  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 வர மிளகாய்
  • 12 சின்ன வெங்காயம்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காய தூள்
  • ½ டம்பளர் தண்ணீர்
  • உப்பு
  • அரைத்த தேங்காய்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. நாம் எடுத்துக் கொண்ட இரண்டு பெரிய முள்ளங்கியின் மேற்புற தோல்களை சீவி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கப் தேங்காய் துண்டுகள், 4 பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து திருதிருவேன தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து மூன்று மேசை கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின் கடுகு பொரிந்து வந்தவுடன் ஒரு டீஸ்பூன் அளவு கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும், பின்பு ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய 12 சின்ன வெங்காயம், இரண்டு வரமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  4. பின்பு சின்ன வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன் இதனுடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விடவும. பின் நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி விட்டு.
  5. அதன் பின் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயை மூடி வைத்து ஒரு எட்டு நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  6. பின் முள்ளங்கி நன்றாக வெந்து வந்ததும் மிக்ஸியில் அரைத்த தேங்காயை கடாயில் சேர்த்து வதங்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி பொரியல் கூட்டு இனிதே தயாராகிவிட்டது.