ஒரே மாதிரி தோசை சாப்பிட்டு சலித்து விட்டதா ? கேழ்வரகு வெல்ல தோசை இப்படி ட்ரை பன்னி பாருங்க!

Summary: கேழ்வரகு தோசை என்றாலே பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் அந்த காலங்களில் கேழ்வரகுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். கேழ்வரகு இல்லாத வீடுகளே இருக்காது ஆனால் இன்று பெரும்பாலானோர் வீடுகளில் கேழ்வரகு அதிசயமாகத்தான் பார்க்க முடிகிறது. இந்த கேழ்வரகு வைத்து சுவையான சூப்பரான டேஸ்ட்டில் கேழ்வரகு வெல்ல தோசை இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, இந்த காலத்து குழந்தைகளுக்கும் ரொம்பவே பிடிக்கும். அடிக்கடி கேட்டு அடம் பிடிப்பாங்க.எப்போதும் இட்லி, தோசை மாவு என்று செய்து அலுத்து போனவர்களுக்கு இது போல புதிதாக மற்றும் ஆரோக்கியமுள்ள கேழ்வரகு வெல்ல தோசை செய்து கொடுத்தால் ரொம்பவே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அரிசி உணவை விட மற்ற தானியங்களால் செய்யப்படும் உணவுகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் பலப்படும்.

Ingredients:

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • 1 ஸ்பூன் அரிசி மாவு
  • 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 ஸ்பூன் வெல்லம்
  • 1/4 ஸ்பூன் ஏலக்காய்
  • முந்திரி
  • நெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளுங்கள்.
  2. பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்தாள், முந்திரி துருவல் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
  3. தண்ணீரை விருப்பம் போல சிறிது கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்
  4. பிறகு, வெல்ல தோசைகளை நெய் ஊற்றிச் சுட்டெடுக்கவும்.