ருசியான வெண்டைக்காய் அவியல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Summary: வெண்டைக்காய் ஞாபக சக்திக்கு நல்ல ஒரு காய்கறியாகஇருக்கிறது. பசுமையான இத்தகைய காய்கறிகள் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. வெண்டைக்காயை பலரும் புறக்கணித்து வருகிறார்கள். வெண்டைக்காய்அவியல் அருமையான ருசியில் இருக்கும். சுவையான வெண்டைக்காய் அவியல் எப்படி எளிதாக செய்வது?என்பது போன்ற குறிப்புகளை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Ingredients:

  • 1/4 கிலோ வெண்டைக்காய்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 3/4 கப் தேங்காய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு அதனுடன் மஞ்சள் தூள், வரமிளகாய், சீரகம் எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின்பு வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும், பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெண்டைக்காயைப் போட்டு சில நிமிடம் வதக்கவும்.
  3. பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்பு அதில் புளிச்சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு சில நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
  4. பிறகு அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து, சில நிமிடம் கிளறியபின் இறக்கி பரிமாறினால், வெண்டைக்காய் அவியல் ரெடி.