எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி சாதம் செஞ்சி பாருங்க!

Summary: கோவக்காய், சத்துக்கள் நிறைந்த ஒருகாய்கறி தான். ஆனால் பெரும்பாலும் இதை நாம் சமையலில் சேர்த்துக் கொள்வது கிடையாது.வாரத்தில் ஒரு நாள் இந்த காயை சமைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப நல்லது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இந்த காயை கொடுக்கலாம். இந்த கோவைக்காய் சாதம்  எப்படி பக்குவமாக, சுவையாக செய்ய வேண்டும் என்பதைபற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 2 கப் பச்சை அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 100 கிராம் கோவைக்காய்
  • 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • கடுகு,உளுந்து
  • கடலைப்பருப்பு
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பெரிய வெங்காயம், கோவைக்காயை எடுத்து நீளமாக வெட்டி கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து துருவி கொள்ளவும்.
  2. அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு. உளுந்து, கடலைப் பருப்பை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், துருவிய தேங்காயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்,
  3. மேலும் அதனுடன் நறுக்கிய கோவைக் காய், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்கியதும், பின்பு அதனுடன் எலுமிச்சம் சாறு சேர்த்து நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  4. பின்பு அதில் பச்சை அரிசியை போட்டு ஒருகொதி வந்தவுடன் 10 நிமிடம் கழித்து நன்கு கிளறியபின் இறக்கி பரிமாறினால் ருசியான கோவைக்காய் சாதம் தயார்.