மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

Summary: மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக மாம்பழத்தை கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 மாம்பழம்
  • 1/2 லிட்டர் பால்
  • 5 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 கப் மாம்பழ துண்டுகள்
  • ஐஸ் கட்டிகள்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் மாம்பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள், சர்க்கரை, குளிர்ந்த பால் பாதி அளவு ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  4. பின் மீதமுள்ள பாலை ஊற்றி மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. இதனை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி கொள்ளவும். இப்பொழுது அதன் மேல்  வெட்டியமாம்பழத் துண்டுகளை வைத்து அதனுடன் ஐஸ் கட்டிகளை சேர்த்து   பரிமாறினால்ஜில்லென்று மாம்பழ மில்க் ஷேக் தயார்.