மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பூ வடை இப்படி செய்து கொடுத்து அனைவரையும் குஷி படுத்துங்கள்!

Summary: தென்னிந்திய உணவுகளில் வடைக்கு எப்போதுமே இடம் உண்டு. விசேஷ நாட்கள் என்றாலே கண்டிப்பாக உளுந்து வடை அல்லது மசால் வடை இலையில் இருக்கும். சாமிக்கு படியல் போடும் போதும் கண்டிப்பாக வடை இருக்கும். அதுவே ஸ்நாக்ஸ் என்றால் முதலில் தோன்றுவது வாழைப்பூ வடை தான். பெரும்பாலான பிள்ளைகள் வாழைப்பூ வடை என்றாலே நோ சொல்லி விடுவார்கள்.குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான வாழைப்பூ வடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 100 கிராம் வாழைப்பூ
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 ஸ்பூன் உப்பு
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு
  • கொத்தமல்லி
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள வாழைப்பூவை மிக்சியில் ஒரு அடி அடித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து கலந்து இதனுடன் நாம் அடித்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து கொள்ளவும்.
  3. பின் துவரம் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து அதனைகொரகொரப்பாக அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.
  4. இப்போதுஇது அனைத்தையும் ஒன்றாக  நன்குகலந்து விட்டு ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிடவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடை போல் தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  6. அவ்வளவுதான் சுவையான, ஆரோக்கியமான வாழைப்பூ வடை தயார்.