ருசி நிறைந்த வாழைக்காய் புட்டு இந்த முறையில் வீட்டிலயே செய்து அசத்துங்கள் கொச்சம் கூட மிஞ்சாது!

Summary: குழந்தைகள் இதை வறுவல், சிப்ஸ், பொரியல் என்றுபல வகையில் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் இது போன்ற வாய்வு பிரச்சனை உள்ள பெரியவர்களுக்குஇந்த முறையில் வாழைக்காய் புட்டு சமைத்துக் கொடுப்பதினால் அவர்களுக்கு நிச்சயம் வாய்வுபிரச்சனை இருக்காது. வாழைக்காயை இப்படி சமைத்தால் வாய்வு தொல்லையேஇருக்காது. கை, கால், மூட்டு வலி, உள்ளவர்கள் கூட இந்த வாழக்காய் புட்டை பயப்படாமல் சாப்பிடலாம். வாழைக்காய் வைத்து நிறைய வகையான ரெசிபிகளைசெய்யலாம்.  வாழைக்காய் புட்டு  வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த சமையல் குறிப்புபதிவிலும் ஹோட்டல் சுவையில் வாழைக்காய் புட்டு எப்படி செய்வது என்று தான் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

Ingredients:

  • 2 வாழைக்காய்
  • உப்பு
  • பெருங்காயம்
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 3 மிளகாய் வற்றல்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வாழைக்காய்களை போட்டு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.
  2. பின்பு வேக வைத்த வாழைக்காய் பாதி வெந்தும், எடுத்து ஆற வைத்து, அதன்தோலைச் சீவி விட்டு, அதை வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் நன்கு துருவிக் கொள்ளவும்.
  3. அதன் பின்பு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு கடுகு. உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து, துருவிய வாழைக்காயை சேர்த்து, சிறிது உப்பு போட்டு தூவி நன்கு வதங்கியதும் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
  4. மேலும் அதனுடன் பெருங்காயதூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, வெந்தவுடன் இறக்கி பரிமாறினால் ருசியான வாழைக்காய் புட்டு தயார்.