பஞ்சு போல ரேஷன் அரிசியில் இட்லி தோசை மாவு இனி இப்படி செஞ்சி பாருங்க! இட்லி பூ போல வரும்!

Summary: ரேஷன் கடை அரிசியில் எப்படி பஞ்சு போன்ற இட்லி செய்வது என்பதை நாம் பார்க்கப் போகிறோம் இட்லிக்கு என்று தனியாக அரிசி எல்லாம் இருக்கிறது. அதை வாங்கி அரைத்து இட்லி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரசியல் இருந்து எப்படி இட்லி மிருதுவாக பஞ்சு போன்ற செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். இட்லியில் அரிசி உளுந்து சேர்த்து செய்வதால் இரும்பு சத்தும் மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. ரேஷன் அரிசியில் இட்லி செய்யும் போது அதில் வரும் ஒருவித வாசனை சாப்பிடுவதற்கு  பிடிக்காது. ரேஷன் அரிசியில் தான் இட்லி செய்து இருக்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு மிருதுவான பஞ்சு போன்ற இட்லி செய்வதற்கு என்ன செய்முறை என்பதை பார்க்கலாம் .

Ingredients:

  • 3 கப் ரேஷன் அரிசி
  • 2 கப் இட்லி அரிசி
  • 1 14 கப் உளுந்து
  • 34 கப் அவல்
  • உப்பு

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 இட்லி பாத்திரம்

Steps:

  1. முதலில் அரிசியை அளப்பதற்கு தங்களிடம் உள்ள படி அல்லது கப் அல்லது டம்ளர் எதை வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம்.  3  கப் ரேஷன் அரிசியை ஒரு  பாத்திரத்தில்போட்டு அரிசி முழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சிறிது கல் உப்பையும் சேர்த்து  நன்றாககழுவ வேண்டும். அரிசியில் உள்ள பழுப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் கலந்து வெளியேறும். அந்த நீரை வடித்து விட்டு மீண்டும் இதே போன்று 8 முறை உப்பு சேர்த்து அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
  2. பிறகு அதே அரிசி அளந்த கப்பில் 2  கப்இட்லி அரிசி சேர்த்து மீண்டும் இரண்டு முறை சுத்தமாக கழுவி அதிகமாகதண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. அதே கப்பலில் 1 14கப் ஊளுந்தை எடுத்து  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.பின் 34 கப் அவலை எடுத்து கழுவி விட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.அவல் சேர்ப்பதால் இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.
  4. உளுந்து ஊறிய பிறகு கிரைண்டரில் உளுந்தை சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். மாவு 10நிமிடத்தில் உபரியாக வரும். ஆனால் குறைந்தது 25 நிமிடமாவது அரைத்து அள்ள வேண்டும். உளுந்து மாவு கெட்டியாகவும் இருக்க கூடாது தண்ணியாகவும் இருக்க கூடாது. பதமாக இருக்க வேண்டும்.
  5. உளுந்தை அள்ளி ஒரு பாத்திரத்தில் போட்டு பின் அவலை கிரைண்டரில் போட்டு 5 நிமிடம் அரைக்கவும். அரிசியுடன் அவலை சேர்த்து அரைக்க கூடாது. அவல் அரைபட்டதும் அரிசியில் உள்ள நீரை கழுவி வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு  அரைக்கவும்.5 மணி நேரம் ஊறியதால் 15 நிமிடத்தில் சற்று கொரகொரப்பாக அதாவது ரவைரவையாக  அரைப்பட்டுஇருக்கும் அப்போதுபோது தேவையான அளவு உப்பு சேர்த்து  அரைத்து  வழித்துஉளுந்து மாவுடன் நன்றாக கலந்து மூடி வைக்கவும்.
  6. 8 முதல் 9 மணி நேரம் கழித்து பார்த்தால் இட்லி மாவு  நன்றாகபுளித்து இருக்கும்.  மாவைநன்றாக கலக்கவும் அப்போது தான் அடியில் உள்ள மாவுடன் ஒன்றாக கலக்கும்.. இப்போது இட்லி ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுட சுட சூடானமிருதுவான பஞ்சு போன்ற இட்லி தயார்.