முருங்கைப்பூ பூத்து குலுங்கும் பருவம் இது, இரும்பு சத்துக்கள் நிறைந்த முருங்கைப்பூவில் பொரியல் செய்து சாப்பிடுங்கள்!!!

Summary: முருங்கைபூவில் ஏராளமான மருத்துவகுணங்கள் உள்ளடங்கியுள்ளது . முருங்கை பூவிலும் பொரியல் செய்து விட முடியும்.முருங்கை மரம் முழுவதும் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. முருங்கைக்கீரை முதல்அதன் காம்பு வரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என்று ஒவ்வொன்றுமே மனிதனின் ஆரோக்கியத்திற்குதேவையான அத்தனை சத்துக்களையும் கொண்டு நம் கண் முன்னே சாதாரணமாக நிற்கிறது. அத்தகையமுருங்கைப்பூவில் பொரியல் எப்படி செய்வது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்வாருங்கள்.

Ingredients:

  • 2 கப் முருங்கைப்பூ
  • 1 கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் பாத்திரத்தில் முருங்கை பூவை மட்டும் ஆய்ந்து எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காய், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
  2. மேலும் மிக்சி ஜாரில் நறுக்கிய தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  3. பின்பு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் விழுது, மஞ்சள் பொடி, போட்டு சில நிமிடம் நன்கு வதக்கி கொள்ளவும்.
  4. மேலும்வதக்கிய கலவையுடன், ஆய்ந்த முருங்கைப்பூ, சிறிதளவு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து சில நிமிடம் நன்கு வேக வைத்து தண்ணீர் வற்றியதும், கிளறி விட்டு இறக்கி பரிமாறினால்,
  5. சுவையான முருங்கைப்பூ பொரியல் ரெடி.