வீட்டில் ஈஸியாக செய்யகூடிய பாலக் தக்காளி தோசை! கண்டிப்பாக மறக்காமல் இப்படி செய்து பாருங்க!

Summary: காலைநேரத்தில் சில  நிமிடத்தில், ஒரு அருமையான பாலக் தக்காளி தோசையை செய்து முடித்து விடலாம். பாலக் கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரையின் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்பாலக்தக்காளி தோசை, குழந்தைகளுக்கு இதை வெறுமனே கொடுத்தால் கூட, அவர்கள் கையாலேயே எடுத்து, சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு ஒரு ருசியான கலரான பாலக் தக்காளி தோசை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Ingredients:

  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 2 மேசைக்கரண்டி உளுந்து
  • 1 கப் பாலக் கீரை
  • 3 தக்காளி
  • 6 காய்ந்த மிளகாய்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1 துண்டு இஞ்சி
  • உப்பு
  • 1 பின்ச் சமையல் சோடா
  • 50 கிராம் எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • கருவேப்பிலை/மல்லி இலை

Equipemnts:

  • 1 தோசை கல்

Steps:

  1. அரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம்,கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்யாராய் எடுத்து வைக்கவும்,
  2. அரிசியுடன் மிளகாய், சிறிது கருவேப்பிலை, சோம்பு, சீரகம், தக்காளி, உப்பு சேர்த்து கெட்டியாக, கரகரப்பாக அரைக்கவும். அதனுடன் சமையல் சோடா சேர்த்து கலந்து 4 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
  3. தோசை சுடுவதற்கு முன் வெங்காயம்,மல்லி/கருவேப்பிலை, பாலக் கீரை ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  4. மாவை தோசைக்கல்லில் அடையைப் போல் சற்று தடிமனாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்,
  5. சுவையான பாலக் தக்காளி தோசை ரெடி.