கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

Summary: பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்க கூடியது தான் விரால் மீன். இந்த விரால் மீன் ஏரிகள், குளங்கள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் வாழ்வதால் இதில் அதிக அளவு புரதசத்து இருக்கும். அது மட்டுமில்லாமல் விரால் மீன் நேரடியாக காற்று சுவாசிப்பதால் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதால் இதில் அதிகப்படியான புரதச்சத்துக்கள் நாம் சாப்பிடும் பொழுது நம் தசைகளின் செயல்பாட்டு திறனை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் விரால் மீனில் இருக்கும் அல்புமின் என்ற சத்து நம் உடலில் ஏற்படும் காயங்களை வேகமாக ஆற்றுவதற்கு உதவுகிறது.

Ingredients:

  • ½ KG விரால் மீன்
  • எண்ணெய்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • 1 tbsp சீரகம்
  • 25 கிராம் புளி
  • 5 பல் பூண்டு
  • கொத்தமல்லி
  • 3 தக்காளி
  • ½ tbsp மஞ்சள்தூள்
  • 2 tbsp வெந்தய பொடி
  • 3 tbsp மல்லித்தூள்
  • 2 tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp வெந்தயம்
  • ½ கப் தேங்காய் துருவியது
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 piece பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Steps:

  1. விரால் மீனை வாங்கும் பொழுது புதிய மீனாக இருக்கிறதா என்று பார்த்து கவனமாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு மீன் வெட்ட தெரியாது என்றால் வெட்டியே மீனே வாங்கிக் கொள்ளுங்கள்.
  2. நம் வாங்கி கொண்ட விரல் மீனை ஒரு சட்டியில் வைத்து சட்டியில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை அலசி கொள்ளுங்கள். மீன் குழம்புக்கு தேவையான புளியையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பின்பு வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லி, கருவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீன் குழம்பு பொருத்தவரை மண் சட்டியில் செய்வது மிகவும் ருசியாக இருக்கும்.
  4. உங்களிடம் மண்சட்டி இல்லையென்றால் வீட்டில் இருக்கும் குழம்பு பாத்திரத்தில் தயார் செய்யுங்கள்.குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறும் வரை காத்திருக்கவும்.
  5. எண்ணெய் சூடுடேறியவுடன் வெந்தயம், சீரகம், கருவேப்பிலை,பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு அதில் வெங்காயத்தை போடவும், வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும் தக்காளியின் பச்சை வாடை போயி மென்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
  7. அதன் பின்பு அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு நன்றாக கிளறி விட்டு பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும் பச்சை வாடை போனவுடன்.
  8. நம் ஊற வைத்துள்ள புளியை கரைத்து புளி கரைசலை மசாலாவுடன் சேர்த்து ஊற்றவும் அதன் பின் தேவையான அளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
  9. குழம்பு நன்றாக கொதித்த பிறகு நாம் வைத்துள்ள விரால் மீன் துண்டுகளை போட்டு பிறகு தீயை குறைத்து வைத்து குறைந்த தீயிலேயே வேக வைக்கவும்.
  10. நம் போட்ட மீன் வெந்தவுடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் ஊற்றி கொதிக்க விடவும். பின்பு இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி கொத்தமல்லியை தூவி விடவும் இப்போது சுவையான விரால் மீன் குழம்பு இனிதே தயாராகி விட்டது.