பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்துல இப்படி செஞ்சா ஒரு தட்டு சோறும் மொத்தமும் காலியாகிவிடும்!

Summary: மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான்பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாகஇருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம்.இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும்பரங்கிக்காய் பால் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக செய்யலாம்.

Ingredients:

  • 1 கப் பரங்கிக்காய்
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 கப் காய்ச்சிய பால்
  • 1 டேபிள்ஸ்பூன் வெல்லம்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பரங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  2. காய் விழுதையும் வெந்தவுடன், அரைத்த உப்பையும் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும்.
  3. வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்து, அந்தத் தண்ணீரையும் கூட்டில் சேர்க்கவும்.
  4. கொதித்ததும் இறக்கி, பால் சேர்க்கவும். இனிப்பான இந்தக் கூட்டு, சாப்பிட்ட அனைவரையும் கவர்ந்திழுக்கும்.