வீடே மணக்கும் படி 'புதினா புலாவ்' இனி இப்படி செஞ்சி பாருங்க இனி நீங்களே வீட்டில் அடிக்கடி செய்வீங்க!

Summary: சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். புதினா நறுமனத்திற்கு மட்டும் சேர்த்து கொள்ளமால் அதை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக கோடையில் வெப்பநிலை உயராமல் உங்கள் உடலைப் பாதுகாக்க இது பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பிஸியான மற்றும் அதிக காலை அவசர நேரங்களில் இதை நீங்கள் விரைவாக செய்து விடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1 டம்ளர் அரிசி
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • உப்பு
  • 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 1/4 கப் தயிர்
  • 1 1/2 கப் புதினா
  • 1 1/2 கப் மல்லி இலை
  • 6 1 1/2 பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பட்டை
  • 1 லவங்கம்
  • 1 அன்னாசிபூ
  • 2 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு

Equipemnts:

  • 1 குக்கர்

Steps:

  1. பின்னர் புதினா மற்றும் மல்லி இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா, மல்லி இலை ,இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி பட்டை,‌ சோம்பு, லவங்கம், அன்னாசிபூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின்னர் தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது, காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. சிறிது நேரம் கழித்து அரிசியை சேர்த்து  நன்குகலந்து விடவும். அதன்பின் ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
  6. பின்னர் குக்கரில் 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  7. அவ்வளவுதான் சுவையான புதினா புலாவ் தயார்.