உடலுக்கு ஆரோக்கியம் தரும் முளைக் கீரை சப்பாத்தி மிருதுவாக இப்படி செய்து பாருங்களேன்!

Summary: ஆரோக்கியம் தரக்கூடிய முளைக் கீரையை கடைந்துகொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள்.இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு,அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

Ingredients:

  • 1 கப் முளைக்கீரை
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் காரட்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேசைக்கரண்டி சீரகத் தூள்
  • உப்பு
  • எண்ணெய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
  2. கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை வதக்கவும்.
  3. பின்பு வதக்கிய கீரை, காரட் துருவல், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
  4. சிறிதளவு மாவை எடுத்து சப்பாத்தி போல் இட்டு அதன் மேல் சிறிது எண்ணெய் தடவவும்
  5. பின் முக்கோணமாக மடித்து மீண்டும் சப்பாத்தி போல் இட்டு சுட்டு எடுக்கவும். இப்படி செய்வதால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
  6. இதற்கு தொட்டுக் கொள்ள பனீர் பட்டர் மசாலா, சன்னா மசாலா, சிக்கன் கிரேவி ரைத்தா வைத்து சாப்பிடலாம்.