புராட்டாசி ஸ்பெஷல் கோவா கிரேவி இப்படி மிஸ் பண்ணமா வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க!

Summary: கோவா தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால் உடலில் இருக்கும் பல பிரச்சனைகள் நீங்கும்.அந்த அளவிற்கு மருத்துவ குணம் மிக்கது கோவா. எனவே இக்கோவாவை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் கிரேவி எப்படி செய்வது..? என்பதை இப்பதிவில் பார்க்கலாம். நாம் என்ன தான் பொரியல் கூட்டு என்று சாப்பிட்டாலும் கிரேவியின் சுவையை மிஞ்ச முடியாது. மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம்,  தக்காளி  சாதம்,  தயிர்சாதம்,  தேங்காய்சாதம்  ஆகியவற்றுடன்சுவையாக இருக்கும்.

Ingredients:

  • 1 கொய்யாக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • கொத்தமல்லி தழை
  • 1 ஸ்பூன் கசகசா
  • 1/2 மூடி தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கொய்யாவை கழுவி தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  2. பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், தக்காளி, கொய்யா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய்,பச்சை மிளகாய், கசகசா, மூன்றையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. பின் அரைத்ததை எடுத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி பிறகு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  6. அவ்வளவுதான் சுவையான கோவா கிரேவி தயார்.