சுவையான காளான் பொரியல், சாதம் ,ரொட்டி மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்!

Summary: காளான் பொரியல் மிகவும் சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். டிஷ் சற்று காரமானதாக இருக்க, மிளகாய் தூளை  பயன்படுத்த வேண்டும். அதேபோல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமான தக்காளியை சேர்க்க வேண்டாம். காளான் பொரியல்இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரியான அளவுகளை பயன்படுத்தி செய்தால் அருமையாக இருக்கும்.. இந்த மசாலாவை சப்பாத்தியில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம்.

Ingredients:

  • 10 காளான்
  • 1 வெங்காயம்
  • மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி உளுந்து
  • கறிவேப்பிலை
  • மல்லித்தழை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. காளானை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும். பின் வெங்காயத்தையும் வெட்டிக்கொள்ளளவும்.
  2. பிறகு நல்லெண்ணெய் இட்டு கடுகு உளுந்து தாளித்து விடவும்.
  3. பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், கறிவேப்பிலை சேர்க்கவும்
  4. காளான் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து கிளறவும்.
  5. பின்னர் மூடி வேக விடவும். வெந்ததும் இறக்கி, மல்லித்தழை தூவி பரிமாறவும்
  6. சுவையான காளான் பொரியல் தயார்.