வெங்காயம் தக்காளி எதையுமே சேர்க்காம முட்டை தாளிப்பு ஒரு முறை வித்தியாசமா இப்படி செஞ்சி பாருங்க!

Summary: அசைவ வகையில் பல உணவுகள் இருந்தாலும் கூட நாம்முதலில் தேர்ந்தெடுப்பதென்னவோ இந்த முட்டையை தான். அதே போல் சாதத்திற்கு ஏதாவது ஒருசைடு டிஷ் செய்ய வேண்டும் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது முட்டை தான். ஏனெனில்இதை செய்வது மிகவும் சுலபம். வெறும் முட்டையை அவித்து சாப்பிடுவதற்கு பதிலாக இப்படி வித்தியாசமாக செய்யலாம்.அப்படி நினைத்தவுடன் செய்யக் கூடிய ஒரு முட்டை செய்முறைஇன்னும் அதிக சுவையுடன் எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Ingredients:

  • 5 முட்டை
  • 2 கைப்பிடி வறுத்த கொண்டைக்கடலை
  • 1 முழுதாக பூண்டு
  • 3 வெங்காயம்
  • 1 கைப்பிடி தேங்காய் துருவல்
  • 6 வரமிளகாய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1/4 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1/4 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி உளுந்து

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வறுத்த கொண்டைக்கடலை, தேங்காய் துருவல், பூண்டு, மிளகாய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். வேக வைத்த முட்டையை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளவற்றுடன் வர மிளகாய், வெங்காயம்சேர்த்து சிவக்க வதக்கவும்.
  4. பின் முட்டையை சேர்த்து உடையாமல் கவனமாக கிளறவும்.
  5. பின் இறக்கி பொடியை சேர்த்து ஒரு சேர கிளறி பரிமாறவும்.