மணமணக்கும் சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி ?

Summary: கல்யாண வீடுகளில் மோர்க்குழம்பு கேட்டு கேட்டு சாப்பிடுபவர்களும் உண்டு. உடலுக்கு குளிர்ச்சியை தரும் இந்த மோர் குழம்பு. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இந்த மோர் குழம்பை, ஈசியாக செய்து விடலாம், முதல் முறை மோர் குழம்பு செய்பவர்கள் இந்த முறை எந்த காய்கறிகளும் சேர்க்காமல் செய்து பாருங்கள் அப்பொழுது மோர் குழம்பு திரியாமல் அலாதியான மணம் மற்றும் சுவையுடன் செய்து விடலாம்.

Ingredients:

  • ½ லிட்டர் தயிர்
  • 2 தேக்கரண்டி துவரம் பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • ¼ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டேபிள் ஸ்பூன் கடுகு
  • ½ டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 3 காய்ந்த மிளகாய்
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • ¼ டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தழை
  • உப்பு

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் மோர் குழம்பிற்கு தயிர் எடுக்கும் போது எப்போதும் அதிக புளிப்புடன் எடுக்க கூடாது. அது மிதமான புளிப்புடன் இருந்தால் தான் குழம்பு நன்றாக இருக்கும். இப்பொது ½ லிட்டர் அளவுக்கு தயிர் எடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  2. உங்கள் வீட்டில் மத்து இருந்தால் அதனை கொண்டு கூட கடைந்து கொள்ளலாம். கட்டிகள் இல்லாதவாறு கடைந்து கொள்ள வேண்டும்.
  3. அடுத்து இரண்டு தேக்கரண்டி துவரம் பருப்பை பத்து நிமிடங்கள் மட்டும் ஊற வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு கூடவே ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு துண்டு இஞ்சி, மூன்று பச்சை மிளகாய், போட்டு சிறிதளவு மட்டும் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
  4. அரைத்த இந்த விழுதை கடைந்து வைத்த தயிரோடு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடுங்கள். மோர் குழம்பு கெட்டியாக வைக்கக்கூடாது.
  5. நேரம் ஆக ஆக அது கெட்டி ஆகி விடும். எனவே போதுமான அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவுக்கு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  6. பிறகு அடுப்பில் காடையை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம், கடுகு சேர்த்து பொரிந்தவடன் மூன்று காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பின் நாம் வைத்து இருக்கும் தயிர் கலவையை சேர்த்து கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் இதனை மூடி வைத்து கொதிக்க விடுங்கள்.
  8. மோர் குழம்பில் வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய் போட்டும் வைக்கலாம், இடையில் கிளறி விட்டுக் கொள்ளுங்கள். குழம்பு கொதித்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி இழையை தூவி சூடாக பரிமாறவும்.