ஆரோக்கியம் மிகுந்த காளான் சூப் செம்ம ருசியாக செய்ய வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதுமே!

Summary: குளிர்,மழை காலம் வந்துவிட்டாலே எதையும் சூடாகசாப்பிட வேண்டும் என்று தான் தோன்றும். காலையில் சமைத்த உணவு ஒரு மணி நேரத்திலேயே பிரிட்ஜில்வைத்த உணவு போன்று மாறிவிடும். எனவே உணவு வகைகளை சுடச்சுட சாப்பிட்டால் மட்டுமே மழை,குளிர்காலங்களில் உடம்பிற்க்கு இதமாக இருக்கும். அப்படி உணவு மட்டுமல்லாமல் உடம்பிற்க்குகொஞ்சம் புத்துணர்ச்சி தரக்கூடிய வகையில் காளான் சூப்செய்தும் குடிக்கலாம். இப்படிஅடிக்கடி சூப் செய்து குடித்தால் உடம்பில் சளி தொல்லை இருந்தாலும் சரியாகிவிடும்.  வாருங்கள் இந்த சுவையான காளான் சூப்பை எப்படி செய்வதுஎன்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ காளான்
  • 3 தக்காளி
  • 4 டீஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் சர்க்கரை
  • வெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கான்பிளவர்
  • 1/4 லிட்டர் பால்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் தக்காளியை அரைத்து கொள்ள வேண்டும். தண்ணீரில் காளானை வேக வைக்கவும்.
  2. பின் காளான் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி, பேஸ்ட்டை ஊற்ற வேண்டும். கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய் சேர்க்கவும்,
  3. கான்பிளவர் மாவை சிறிது நீரில் கலக்கி சூப்பில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  4. இறுதியாக பால் ஊற்றி இறக்கவும், சுவையான காளான் சூப் தயார், இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.