காரசாரமான ருசியில் மினி ஆலு மசாலா இப்படி சுலபமாக வீட்டிலயே செய்திடலாம்! இதன் ருசியே தனி ருசி தான்!

Summary: சப்பாத்தி இட்லி, தோசை, பூரிக்கு மினி ஆலுமசாலா செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் குழந்தைகள் சாப்பிடுவார்கள். சிலருக்குபன்னீர் பிடிக்காமல் இருக்கும். அவர்கள் உருளைக்கிழங்கு ஒரு சூப்பரான மணக்க மணக்க நாவூறும்கெட்டியான கிரேவி இப்படி தயாரித்துப் பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மினி ஆலு மசாலா எப்படி செய்வது? என்பதைத் தான்இனி இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 12 சின்ன உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 டீஸ்பூன் பட்டை – சிறிது, ஏலக்காய் -1, கிராம்பு- 1
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 2 வேகவைத்த சின்ன உருளை
  • 1 1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • புளி
  • உப்பு
  • 1/4 டம்ளர் எண்ணெய்
  • 2 டீஸ்பூன் பொடித்த வெல்லம்

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும்,தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
  2. பட்டை,ஏலக்காய், கிராம்பு மூன்றையும் சேர்த்து பொடித்த பொடி,சீரகம், மஞ்சள்தூள், வேகவைத்த 2 உருளைக்கிழங்கு (தோல் உரித்தது), வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில்போட்டு அரைத்தெடுக்கவும். புளி, உப்பை 1 டம்ளர் தண்ணீர்சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்லம் சேர்த்துகரைக்கவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகவதக்கி, தக்காளியையும் சேர்த்து உருத்தெரியாமல் வதக்கவும்.
  4. இது சப்பாத்தி,பரோட்டா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட்-டிஷ் ஆகும்.