சாதத்தில் கலந்து சாப்பிட ருசியான தக்காளி இக்ரூ இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க அருமையாக இருக்கும்!

Summary: சப்பாத்தியுடன், சாதத்துடன் தக்காளி இக்ரூசேர்த்து சாப்பிட்டால் எல்லோருக்குமே ரொம்பவும் பிடிக்கும். உருளைக்கிழங்கு மசாலாவைவிட, அதிகம் விரும்பப்படும் இந்த தக்காளி இக்ரூ சப்பாத்திக்கு மட்டும் அல்லாமல் சாதத்துடன்  கூட சாப்பிடும் வகையில் டேஸ்டியாக செய்யலாம். தக்காளி இரத்த சோகை, கல்லீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகும். தக்காளியில் பீட்ட கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை தருகிறது.

Ingredients:

  • 2 வெங்காயம்
  • 5 நன்கு பழுத்த தக்காளி
  • கறிவேப்பிலை
  • 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  • 3 பச்சைமிளகாய்
  • உப்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டீஸ்பூன் தனியா
  • 8 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/4 கப் எண்ணெய்
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிளகாயைக் கீறிக் கொள்ளுங்கள்.
  3. எண்ணெயைக் காய வைத்து கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும், சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து, மிதமான தீயில் பச்சை வாசனை போகவதக்குங்கள்.
  4. பிறகு தக்காளி, தேவையான உப்பு, சேர்த்து, நன்கு எண்ணெய் கசிந்து சுருளவதங்கும் வரை கிளறி, கடைசியாக அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டுஇறக்குங்கள்.
  5. இதை சாதத்தில் கலந்து சாப்பிட செம டேஸ்ட்