உங்க வீட்டில் செய்யும் பீன்ஸ் பொரியலும் இனி ருசியாக இருக்கும்! பீன்ஸ் எள் பொரியல் காரசாரமாக இப்படி செய்து அசத்துங்க!

Summary: நார்ச்சத்து நிறைந்த இந்த பீன்ஸ் காயை வாரத்தில்ஒரு நாளாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்த பீன்ஸ் பொரியலை விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். ஆனால் இந்த எள் சேர்த்து  பீன்ஸ் பொரியல் செய்து கொடுத்தால், பீன்ஸை கண்டால்வெறுப்பவர்கள் கூட அதை விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வளவு சுவை இருக்கும்.வாங்க அந்த அருமையான ஆரோக்கியம் தரும் பீன்ஸ் எள் பொரியல் செய்வது எப்படி என்று நாமும்தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 2 கப் பீன்ஸ்
  • 3 டேபிள் ஸ்பூன் எள்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 4 பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. கடாயில் எண்ணெய் இல்லாமல் எள்ளை போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் பொடி செய்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு. சீரகம், கறிவேப்பிலை பச்சைமிளகாயை சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு பீன்ஸைச் சேர்த்து சிறிது நீரைத் தௌறத்து மூடி வைக்கவும்.
  4. மிதமான தீயில் வைத்து வேக விடவும், காய் வெந்ததும் அதில் உப்பு, பொடியாக்கிய எள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி 1 நிமிடம் வைத்து இறக்கவும்.
  5. சுவையான பீன்ஸ் எள் பொரியல் தயார்.