இனி இட்லி, தோசைக்கு பூண்டு சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இட்லியோ, தோசையோ 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!

Summary: இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. ஆம் அடிக்கடி திருப்பி திருப்பி ஒரே மாதிரியான வைக்கமால் இனி இப்படி பூண்டு சட்னி ட்ரை பண்ணி பாருங்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சட்னியாக இருக்கும் அவசியம் நீங்களும் வீட்டிலயே செஞ்சி பாருங்க இதன் ருசியும் தனி ருசி தான்

Ingredients:

  • 10 சின்ன வெங்காயம்
  • 25 பல் பூண்டு
  • 10 கிராம் புளி
  • 5 கிராம் காய்ந்த மிளகாய்
  • 1 Tsp கடுகு
  • 1 Tsp உளுந்த பருப்பு
  • 1 குழிக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1/4 Tsp பெருங்காய தூள்

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Steps:

  1. முதலில் கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் ஊற்றி பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் ,காய்ந்த மிளகாய் வதக்கவும்
  2. பின் வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்ததும் நாம் வைத்திருக்கும் புளி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும்
  3. பின் அனைத்தும் நன்றாக வதங்கியதும் கடாயை இறக்கி வதங்கிய பொருட்களை நன்கு ஆற வைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்
  4. பின் கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து மீதி இருக்கும் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கடுகு ,உளுந்தப்பருப்பு ,பெருங்காய தூள் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  5. பின் நாம் வதக்கி அரைத்த சட்னியை கடாயில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பரான பூண்டு சட்னி ரெடி இரண்டு இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க