பொரித்த உருளை கிழங்கு கிரேவி செய்வது எப்படி ?

Summary: இன்று உருளைக்கிழங்கை பொரித்து எடுத்து பின்பு அதனை வைத்து கிரேவி செய்து பார்க்க போகிறோம் இதன் சுவை அசத்தலாக இருக்கும். இதை நீங்கள் இட்லி தோசை என எதனுடன் வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை நீங்கள் ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் இந்த பொரித்த உருளைக்கிழங்கு கிரேவியை விரும்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறை நீங்களும் இதையே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

Ingredients:

  • 1 கப் கொத்தமல்லி
  • 10 பல் பூண்டு
  • 5 பச்சை மிளகாய்
  • 3 உருளைக்கிழங்கு
  • ½ tbsp உப்பு
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • 4 tbsp எண்ணெய்
  • ½ tbsp சீரகம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 பொரிய வெங்காயம்
  • ½ tbsp காஷ்மீர் மிளகாய் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு
  • அரைத்த கொத்தமல்லி
  • உருளைக்கிழங்கு
  • 1 டம்பளர் தண்ணீர்
  • கொத்தமல்லி

Equipemnts:

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவு கொத்தமல்லியை அமுக்கி எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள், பின் இதனுடன் 10 பல் பூண்டு, ஐந்து பச்சை மிளகாய் மற்றும் நான்கு டீஸ்பூன் அளவு தயிர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  2. அதன் பிறகு மூன்று உருளைக்கிழங்கை எடுத்து அதன் வெளிப்புறத் தோல்களை சீவி, பின் நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின் நறுக்கிய துண்டுகளை ஒரு பவுளில் போட்டு அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நான்கு பிரட்டி விடவும்.
  3. பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதே கடாயில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் அளவு சீரகம் சேர்த்து கொள்ளவும்.
  4. பின் சீரகம் பொரிந்து வந்தவுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும், வெங்காயம் பொன்னிறமாக வதங்கி வந்தவுடன் காஷ்மீர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நான்கு கிளறிவிட்டு வதக்கி கொள்ளவும்.
  5. பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் ஒரு அரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் அரைத்து கொத்தமல்லியை இதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  6. பின் முதலில் பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் ஒரு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கடையை மூடி வைத்து நன்கு வேக வையுங்கள், பின் கிரேவி நன்கு கொதித்து வந்ததும் சிறிது கொத்தமல்லியை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான பொரித்த உருளைக்கிழங்கு கிரேவி தயார்.