கிராமத்து ஸ்டைல் பூண்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Summary: உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல், வெறும் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். பூண்டு குழம்பு காரமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான தென்னிந்திய குழம்பு வகைகளில் ஒன்றாகும். பொதுவாக கிராமத்து ஸ்டைலில் என்ன செய்தாலும் அதற்கு தனி சுவை இருக்கும், அதுவும் கிராமத்து பூண்டு குழம்பு மிகவும் பிரபலமானது.

Ingredients:

  • 1 கப் சின்ன
  • 1/2 கப் பூண்டு
  • 1 சிட்டிகை கல் உப்பு
  • 1 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 2 மிளகாய் வற்றல்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் கடலை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் லநல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் மஞ்சள்
  • புளி
  • கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 மண்சட்டி
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Steps:

  1. முதலில் பூண்டு மற்றும் வெங்காயத்தை உறித்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகாய்வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
  3. பிறகு வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் இவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் பூண்டு வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள், சாம்பார்தூள், கல்லுப்பு சேர்த்து பச்சை வாசனைபோகும் வரை வதக்கி புளியை கரைத்து ஊற்றவும்.
  5. இப்பொழுது குழம்பு நன்கு கொதித்து வற்ற ஆரம்பிக்கும் போழுது‌ குழம்பை இறக்கி வைக்கவும்.
  6. அவ்வளவுதான் அருமையான கிராமத்து சுவையில் பூண்டு கார குழம்பு ரெடி. இந்த காரகுழம்பு சாதம் அல்லது இட்லி மற்றும் தோசையுடன் கூட சுவையாக இருக்கும்.