ரொம்ப ரொம்ப சுலபமா வாழைத்தண்டு துவையல் ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க!

Summary: உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை நாம்அதிகமாக நம்முடைய உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதே கிடையாது. அந்த வரிசையில் நிறையபேர் இந்த வாழைத்தண்டை சுத்தம் செய்வதற்கு சிரமப்பட்டு வாங்க மாட்டார்கள். ஆனால் கிட்னியில்இருக்கக்கூடிய கல்லைக்கூட வெளியேற்றும் சக்தி இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. கிட்னியில்கல்லை வரவிடாமல் தடுக்க கூடிய சக்தியும் இந்த வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர்க் கோளாறுகளைநீக்கும் வாழைத்தண்டை வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாளாவது சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.வாங்க வாழைத்தண்டு துவையல்  எப்படிசெய்வது என்று பார்ப்போம்.

Ingredients:

  • 1 துண்டு வாழைத்தண்டு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • புளி
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் வாழைத்தண்டை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் உள்ள நாரை தனியாக நீக்கி கொள்ளவும், அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்ததும், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மேலும் அதே வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வாழைத் தண்டை போட்டு ஓரளவு வேகும் வரை நன்கு வதக்கியபின், இறக்கி ஆற வைத்து கொள்ளவும்.
  3. பிறகு மிக்சிஜாரில் வறுத்த உளுத்தம் பருப்பு கலவையை போட்டு நன்கு அரைத்தும், அதனுடன் வதக்கிய வாழைத் தண்டுகளை போட்டு, ருசிக்கேற்ப உப்பு, புளி, லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக அரைத்து எடுத்து, சூடாக தோசை அல்லது இட்லியுடன் பரிமாறினால், ருசியான வாழைத்தண்டு துவையல் ரெடி!