காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

Summary: டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15 நிமிடங்களுக்குள் செய்யலாம். எப்போதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என செய்வதை காட்டிலும், இது போன்ற வித்தியாசமாக செய்தால் சுவையும் பிரமாதமாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களும் விரும்பி உண்பார்கள். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் டர்கிஷ் பிரட் டோஸ்ட் செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இதனை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

Ingredients:

  • 2 கப் மைதா
  • 1/4 கப் பால்
  • 1/4 கப் சுடு தண்ணீர்
  • 2 டீஸ்பூன் ஈஸ்ட்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் ஆலிவ்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் வெண்ணெய்
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 2 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்

Equipemnts:

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

Steps:

  1. முதலில் வெண்ணெயில் மல்லி தழை, சில்லி ஃப்ளெக்ஸ் சேர்த்து நன்கு கலந்து தனியே வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  3. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  4. பின்னர் 2ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு 15 நிமிடங்கள் பிசையவும்.
  5. மாவின் மேல் 1 ஸ்பூன் எண்ணெய் தடவி மூடி போட்டு மாவு உப்பி வரும் வரை 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  6. மாவு இரு மடங்கு உப்பி வந்ததும் மீண்டும் எடுத்து ஒரு நிமிடத்திற்கு பிசைந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  7. ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மாவு தூவி வட்டங்களாக விரிக்கவும்.
  8. பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் சூடானதும், மீடியம் தீயில் வைத்து எண்ணெய் விடாமல் தேய்த்த வட்டத்தை சேர்த்து இரு புறங்களிலும் வேக வைத்து எடுக்கவும்.
  9. பின்னர் உப்பி வந்த ரெட்டியின் மேல் வெண்ணெய் மல்லித்தழை, சில்லி ஃப்ளெக்ஸ் கலந்த கலவையை தேய்க்கவும்.
  10. அவ்வளவுதான். மிருதுவான டர்கிஷ் ரொட்டி ரெடி. இதற்கு பச்சை பயிறு கிரேவி மிக அருமையாக இருந்தது.