டிபன் பாக்ஸில் கொடுத்து விட சாமை வெஜிடபிள் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!

Summary: சிறுதானியங்கள் ஏராளமான நன்மைகள்நிறைந்தது.  குறிப்பாக அது இரத்த கொலஸ்ட்ரால்மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வல்லது. மேலும் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம்.  ஆனால் இவ்வாறான சிறு தானியங்களில் செய்யும் உணவுகளைபலரும் விருப்பமாக சாப்பிடுவது கிடையாது. ஆகவே அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில்வெஜிடபிள் பிரியாணி சமைத்துக் கொடுத்தால், இந்த சிறுதானிய உணவையே அவர்கள் தொடர்ந்துசாப்பிடுவதற்கு பழக்கப்படுத்தி விடலாம். அவ்வாறு அனைவருக்கும் பிடித்த சுவையில் ஆரோக்கியமானசிறுதானியமான  சாமை கொண்டு சுவையான வெஜிடபிள்பிரியாணி செய்து சுவைத்து மகிழுங்கள். சாமை தவிர குதிரைவாலி, வரகு, திணை , போன்றவற்றைகொண்டும் நீங்கள் பிரியாணி செய்யலாம். வாருங்கள் இந்த பிரியாணியை எவ்வாறு செய்ய வேண்டும்என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1/4 கிலோ சாமை அரிசி
  • 5 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பட்டை
  • 1 ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 2 லவங்கம்
  • 1 கப் காய்கறி
  • 1/4 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • மஞ்சள் தூள்
  • எண்ணெய்
  • நெய்
  • கொத்தமல்லித் தழை
  • புதினா
  • 5 முந்திரி
  • 2 பெரிய வெங்காயம்
  • உப்பு
  • தண்ணீர்
  • 2 தக்காளி
  • தயிர்
  • எலுமிச்சைப் பழ சாறு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முதலில் சாமை அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்ற்றவும்.
  2. அத்துடன் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டைலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும், பிள் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கிய பின் மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் காய்கறிகள், பச்சைப் பட்டாணியைச் சேர்த்துக் கிளறவும், அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து கிளறவும்.
  4. பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் ஊறவைத்துள்ள சாமை அரிசியை கழுவி தண்ணீரை வடித்து சேர்க்கவும்.
  5. பின்னர் நறுக்கிய புதினா, கொத்தமல்லி தழை தூவி, நெய் விட்டு, முந்திரியைத் தூவி சிறிதளவு எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கினால் சுவையான சத்தான சாமை பிரியாணி ரெடி.