முட்டைகோஸ் வைத்து இப்படி மணமணக்கும் பருப்பு குழம்பு செய்து பாருங்க இதன் சுவை அபாரமாக இருக்கும்!

Summary: முட்டைகோஸ் கூட்டு ரொம்பவும் சுவையானது என்றுஎல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த முறையில் நீங்கள் ஒரு முறை முட்டைகோஸ் பருப்புகுழம்பு செய்து பாருங்கள், இனி அடிக்கடி முட்டை கோஸ் வாங்க ஆரம்பிச்சிடுவீங்க! அந்தஅளவிற்கு டேஸ்டாக இருக்கக்கூடிய இந்த முட்டைகோஸ் பருப்பு குழம்பு இதே அளவுகளில் இதேபொருட்களை வைத்து செய்து பார்க்க வேண்டும். முட்டைக்கோஸ் பருப்பு குழம்பு எளிதாக எப்படிசுவையாக செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

Ingredients:

  • 1/2 கிலோ முட்டைகோஸ்
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி தனியா தூள்
  • 1/4 கப் கொத்துமல்லி
  • 1 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • எண்ணெய்
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 குக்கர்

Steps:

  1. பருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் முட்டைகோஸை நறுக்கி கொள்ளவும்.
  2. பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பொடித்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடித்த வாசனை மசாலவை போடவும்.
  3. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வதக்கிவிட்டு இஞ்சி பூண்டு விழுதை போடவும். * நன்கு வதங்கியவுடன் தக்காளி மற்றும் முட்டைகோஸைபொட்டு வதக்கவும்.
  4. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பிறகு வேகவைத்த பருப்பு மற்றும் தண்ணிரை ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் இறக்கி பறிமாறவும்