சுவையான புதினா சப்பாத்தி செய்வது எப்படி ?

Summary: நாம் வழக்கமான முறையில் டிபன் உணவை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும். ஆகையால் இன்று ஒரு டிபன் உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். ஆம் இன்று சப்பாத்தியை புதுவிதமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து புதினா சப்பாத்தி செய்யப் போகிறோம். நீங்கள் இதை போல் சப்பாத்தி செய்தால் அப்படியே குருமா இல்லாமல் சப்பாத்தியை சாப்பிடலாம் அந்த அளவிற்கு அதன் ருசி இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு சப்பாத்தி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு சப்பாத்தி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் கூட இது பிடித்தமான உணவாக இருக்கும்.

Ingredients:

  • 2 கப் கோதுமை மாவு
  • 1 கைப்பிடி புதினா இலை
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp மல்லி தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • ½ tbsp சீரகத் தூள்
  • ½ tbsp மிளகாய் தூள்
  • ½ tbsp உப்பு
  • 2 tbsp எண்ணெய்
  • தண்ணீர்

Equipemnts:

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

Steps:

  1. முதலில் ஒரு இரண்டு கப் கோதுமை மாவை சலித்து ஒரு பெரிய பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேது சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. பின் தனுடன் கால் டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மல்லி தூள், அரை டீஸ்பூன் கரம் மசாலா, இடித்த மிளகு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரை டீஸ்பூன் உப்பு, இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  3. பின்பு நாம் சேர்த்த பொருட்களை முதலில் கைகளால் நன்கு கலந்து விடுங்கள், அதன் பின்பு சிறிது சிறுதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சாப்ட்டாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ளுங்கள்.
  4. அதன் பின்பு தேவையான அளவிற்கு உருண்டை பிடித்து உருண்டையை பூரி கட்டையில் வைத்து நீள் வட்ட வடிவமாக தேய்த்துக் கொள்ளுங்கள். பின்பு வட்டத்தின் ஓரங்களை மடித்துவிட்டு சிறிய சதுரமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
  5. பின்பு அந்த சதுரமான மாவையும் பூரி கட்டையில் வைத்து சதுரமாக சப்பாத்தியை தேய்த்து கொள்ளுங்கள். பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் சப்பாத்தி சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளும்.
  6. பின் இவ்வாறு மீதம் இருக்கும் சப்பாத்தியையும் வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சுவையான புதினா சப்பாத்தி இனிதே தயார்.