எவ்வளவு செய்தாலும் காலியாகும் புடலங்காய் கட்லெட் இப்படி ஒரு முறை வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க!

Summary: சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை. வெஜிடபிள் கட்லட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை. இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும்.

Ingredients:

  • 2 சின்ன புடலங்காய்
  • 1/2 கப் பட்டாணி
  • 1 பெரிய
  • 1/2 கப் ப்ரெட் தூள்
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மமிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம்
  • 1/4 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  • உப்பு
  • 1 டேபிள் எண்ணெய்
  • 1/4 கப் மைதா
  • 1/2 கப் ப்ரெட் தூள்
  • 1/4 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய் பொரிப்பதற்கு

Equipemnts:

  • 1 குக்கர்
  • 1 கரண்டி
  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. புடலங்காய் மற்றும் ஊற வைத்த பட்டாணியை குக்கரில் 4விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின்னர் இதில் வேக வைத்த புடலங்காயை மசித்து அதனுடன் பட்டணியும் சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவவும்.
  5. இந்த கலவை ஆறியதும் இதனுடன் 1/2கப் அளவு ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  6. பின்‌ அவற்றை தேவையான வடிவத்திற்கு மாற்றவும்.
  7. பின்னர் ஒரு பௌலில் மைதமாவு, மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.
  8. பின் ஒவ்வொரு துண்டுகளையும் முதலில் கரைத்த மாவில் முக்கி பின் ப்ரெட் க்ரம்ஸ்-ல் புரட்டி தட்டில் வைக்கவும்.
  9. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும் ஒவ்வொரு துண்டுகளாக சேர்த்து 2புறங்களிலும் சிவக்க பொரிக்கவும்.
  10. அவ்வளவுதான். சுவையான புடலங்காய் கட்லெட் ரெடி. டீ, காபியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.