பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து கொடுத்தால்! ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!

Summary: பெண்களுக்கு பீட்ரூட் பெரும் வரப்பிரசாதம் என்றேச் சொல்லலாம். கர்ப்பப்பைக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் உடலில் இரத்தம் அதிகரிக்கவும் பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூடை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ருட்டைக் கொண்டு ஒரு உருண்டை தயாரித்து, குழம்பு செய்து சாப்பிடுங்கள்.

Ingredients:

  • 2 பீட்ரூட்
  • 50 கிராம் பொட்டுக்கடலை
  • தேங்காய்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • உப்பு
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 மூடி தேங்காய்
  • 2 ஸ்பூன் மல்லி தூள்
  • 2 ஸ்பூன் கரம் மசாலா
  • 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 கப் புதினா
  • 1 கப் கொத்தமல்லி
  • 1 கப் கறிவேப்பிலை
  • உப்பு
  • எண்ணெய்
  • 1 பட்டை
  • 1 கிராம்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. பீட்ரூட்டைதோல் நீக்கி நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு மிக்ஸியில் பொட்டுக்கடலை, தேங்காய், மிளகாய் தூள், மல்லித் தூள், இஞ்சி பூண்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்தை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  4. பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  5. முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, இலவங்கம் போட்டு தாளிக்கவும்.
  6. பின்பு கருவேப்பிலை, புதினா சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. ஒரு மிக்ஸியில் தேங்காய் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். இவை நன்கு வதக்கிய பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பின்  அரைத்துவைத்துள்ள தேங்காயை சேர்த்து ஒரு மூடி போட்டு மூடி விடவும்.
  8. வாணலியில் உள்ள குழம்பு நன்கு கொதித்த பின் செய்து வைத்திருக்கும் பீட்ரூட் கோலா உருண்டை அதனில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைத்து விடவும்.
  9. அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு தயார். சுடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.