ஆரோக்கியம் நிறைந்த முருங்கை ரசம் இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!

Summary: முருங்கை ரசம் ஒரு ஆரோக்கியமான தென்னிந்தியரசம் ஆகும், இது செரிமானத்திற்கு உதவும். முருங்கைகாய்   ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக அறியப்படுகிறதுமற்றும் இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும் முருங்கைக் கீரையே நல்ல சத்தான ஆரோக்கியமானபொருள் தான் அத்துடன் மிளகு, சீரகம், பெருங்காயம் எப்படி அத்தனை  ஒன்றாக சேர்த்த இந்த முருங்கை காய் ரசத்தை வைத்துசாப்பிட்டு பாருங்கள் அமிர்தம் போலவே இருக்கும். வாங்க அந்த ரசத்தை எப்படி வைப்பதுஎன்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 2 முருங்கைகாய்
  • புளி
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள்ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள்ஸ்பூன் வரமிளகாய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 தக்காளி
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. முருங்கைக்காயை நறுக்கவும். துவரம்பருப்பில், மஞ்சள்பொடி, 2 கப் தண்ணீர், நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வேக விடவும். மிளகு,சீரகம், மல்லி, தட்டி வைக்கவும்.
  2. முருங்கைக்காய் துண்டுகளின் சதையை மட்டும் வழித்து பருப்பு தண்ணீரில் சேர்க்கவும். தக்காளியை [புளியுடன் சேர்த்து கரைக்கவும்.
  3. வாணலியில் கடுகு, வரமிளகாய், தேங்காய் துருவல் தாளிக்கவும். கரைத்த புளி, தக்காளியை ஊற்றவும். 5 நிமிடம் கொதித்ததும் தட்டி வைத்திருக்கும் ரசப்பொடியை சேர்க்கவும்.
  4. 5 நிமிடம் கொதித்ததும் பருப்பு தண்ணீர் மீதி முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்து கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை மல்லி சேர்க்கவும்.
  5. சுவையான முருங்கைகாய் ரசம் தயார்