மட்டன் யாழ்ப்பான வறுவல் இப்படி மட்டும் செஞ்சி பாருங்க! சுடு சாதமுடன் சாப்பிட பக்காவா இருக்கும்!

Summary: அசைவம் சாப்பிடுபவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக காரசாரமாக சமைத்து சாப்பிட வேண்டும் என நினைத்தால் இந்த மட்டன்யாழ்ப்பான வறுவல் ட்ரை பண்ணலாம்.  இலங்கை மக்களின்உணவின் சுவையை எதுவும் மிஞ்ச முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக சுவையுடன் இருக்கும்.மேலும் அவர்களின் உணவு மிகவும் காரமானதாக இருக்கும். இப்போது சுவையான மட்டன் யாழ்ப்பானவறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

Ingredients:

  • 1/4 கிலோ மட்டன்
  • 20 சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்தமல்லிதழை
  • எண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் தனியா தூள்
  • உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கசகசா
  • 1 துண்டு இஞ்சி
  • 8 பூண்டு பல்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 பட்டை
  • 1 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1 கிராம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Steps:

  1. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும்.
  3. சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. வதக்கிய வற்றுடன்பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
  6. கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
  7. சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.