இஞ்சி பன்னீர் ஃப்ரை இனி எளிமையாக வீட்டிலயே செய்யலாம்! ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!

Summary: ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை, குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை  கொடுத்தால் தேங்காய் பால் சாதம், சீரக சாதம் போன்றவெரைட்டி ரைஸ்களுக்கும் சப்பாத்தி, போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடவும் அவ்வளவுஅருமையாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் இனி இதை சாப்பிட வேண்டும் என்கிறஅவசியமில்லை. நம்முடைய வீட்டிலேயே ரொம்ப எளிதாக ஜின்ஜர் பன்னீர் ஃப்ரை தயாரிப்பது எப்படி? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்புபதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Ingredients:

  • 100 கிராம் பனீர்
  • 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • உப்பு
  • 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 பெங்களூர் தக்காளி
  • மல்லித் தழை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பவுள்

Steps:

  1. பனீரை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அப்பொழுது பனீர் மிருதுவாக இருக்கும்.
  2. தவாவில்1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பனீர் நன்கு பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
  3. அதே தவாவில் மீதியுள்ள நல்லெண்ணெயை விட்டு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  4. நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், மிளகுத்தூளை சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பின்பு பனீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் வற்றும்வரை கிளறி மல்லித்தழையை தூவி பரிமாறவும்.