சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி ? தீபாவளி ஸபெஷல்!

Summary: பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்புமற்றும் கார பலகாரங்களை செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம். ஆனால் தற்போது பண்டிகை நாட்கள் வந்து விட்டால் வெளியே பலகார சீட்டு போடுவது கடைகளில் பலகாரங்கள் வாங்கிக் கொள்வது என சிறிய சந்தோஷமான தருணங்களை நாம் மறந்து வருகிறோம். ஆகையால் இந்த தீபாவளிக்கு என்ன தான் பலகாரங்கள் வெளியில் வாங்கினாலும் ஏதாவது ஒரு பலகாரமாவது வீட்டில் செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டாடுங்கள். அந்த வகையில் இன்று தேங்காய் லட்டு பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் இது மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி.

Ingredients:

  • 2 கப் துருவிய தேங்காய்
  • 400 ML பால்
  • ½ கப் சர்க்கரை
  • 4 tbsp நெய்
  • 10 முந்திரி பருப்பு
  • 10 உலர் திராட்சை

Equipemnts:

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Steps:

  1. முதலில் ஒரு டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் நாம் வைத்திருக்கும் 400 ML பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். பால் நன்கு கொதித்து வந்ததும் தீயை குறைத்து வைத்து ஒரு இரண்டு நிமிடங்கள் காய்ச்சிக் கொள்ளுங்கள்.
  2. அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி கொள்ளுங்கள். பின் நெய் நன்றாக உருகி காய்ந்ததும் நம் வைத்திருக்கும் இரண்டு கப் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி விட்டு வதக்கி கொள்ளுங்கள்.
  3. பின் தேங்காய் நன்றாக வறுபட்டு உதிரியாக வரும் பொழுது நாம் முதலில் காய்ச்சிய பாலை இதனுடன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும். அதன்பின் நாம் வைத்திருக்கும் அரைக்கப் சர்க்கரையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
  4. அதன்பின் சர்க்கரையை உருகி தேங்காயுடன் நன்றாக கலந்து, நாம் ஊற்றிய பாலும் முற்றிலும் வற்றும் வரை நன்றாக கிளறி விடுங்கள். பின் கடாயை கீழே இறக்கிக் குளிர வைத்து கொள்ளுங்கள்.
  5. பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சைகளையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. பின் தேங்காய் கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்த உடன் நம் வறுத்த முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சைமை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள், அவ்வளவுதான் சுவையான தேங்காய் லட்டு இனிதே தயாராகிவிட்டது.