புடலங்காய் வாங்கி இப்மடி கூட செய்யலாம் ருசியான புடலங்காய் முட்டை சாதத்தை நீங்களும் இப்படடி ட்ரை பண்ணி பாருங்க!

Summary: புடலங்காய் பிடிக்காது புடலங்காய் சாப்பிடாதகுழந்தைகளை சாப்பிட வைக்க இந்த ரெசிபி உதவியாக இருக்கும். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்றநேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து சாதம் செய்து விடலாம்என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுதுஇந்த புடலங்காய் ,முட்டை வைத்து சுவையான புடலங்காய் முட்டை சாதம் சாதத்தை செய்துவிடமுடியும். இதனை காலையில் வடித்த மிஞ்சிய சாதத்தில் செய்து கொடுக்க மிகவும் அருமையானசுவையில் இருக்கும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை செய்வதற்கு  குறைவாகத்தான் நேரம் செலவாகும்.வாருங்கள் இந்த சுவையான புடலங்காய் முட்டை சாதத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்தபதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

Ingredients:

  • 1 கப் சாதம்
  • கால் கிலோ புடலங்காய்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 பூண்டு பல்
  • 3 முட்டை
  • எண்ணெய்
  • டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • டீஸ்பூன் உப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

Equipemnts:

  • 1 கடாய்

Steps:

  1. புடலங்காய் விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கி வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் காய வைத்து அதனுடன் கடுகு, வெங்காயம், மிளகாய், பெருஞ்சீரகம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் வதக்கவும். போட்டு அதன் பின் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பிறகு புடலங்காயைச் சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி வேகவைக்கவும்
  5. அதன்பிறகு முட்டையை உடைத்து ஊற்றி வதக்கி உதிரியாக வரும் வரை கிளறி விடவும். உதிராக வடித்த சாதத்தை அதனுடன் சேர்த்து கலக்கவும், சுவையான புடலங்காய் முட்டை சாதம் |ரெடி.